ந்தியாவின் ஆன்மாவையே பதறவைத்திருக்கிறது மணிப்பூரிலிருந்து சமீபத்தில் வெளி யாகியிருக்கும் அந்த காணொலிக் காட்சி. மணிப்பூரின் தலைநகரிலிருந்து வெறும் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக் கும் காக்போக்கி மாவட் டத்தைச் சேர்ந்த, குக்கி பழங்குடி இன பெண்கள் இரண்டு பேர், அப்பகுதியில் வன்முறைகளை மேற்கொண்ட கும்பலால் மடக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டதோடு, அவர்களை அடித்து தௌபால் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்போக் செக்மாய்க்கு இழுத்துச்சென்றனர். தங்களை விட்டுவிடக் கூறி கெஞ்சும் அந்தப் பெண்களை, மீண்டும் மீண்டும் பாலியல்ரீதியாக கொடுமைப் படுத்தியுள்ளனர்.

Advertisment

மிருக நிலையிலிருந்த அந்தக் கும்பலால் அந்த இரு பெண்களும் நெல் பயிரிடும் வயற்பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, கும்பல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தப் பட்ட பெண்களில் ஒருவரின் தந்தையும் சகோ தரனும் அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்றபோது அந்தக் கும்பலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். மணிப்பூரில் கலவரம் தொடங்கிய மறுநாள் நடைபெற்ற இந்த நிகழ்வு இப்போதுதான் சமூக ஊடகங்களில் வெளியான காணொலியின் மூலம் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து தேசிய அளவில் இந்த வன்முறைக்குக் கண்டனம் எழுந்துள்ளது.

dd

இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பழங்குடியினர் தலைவர்களின் கூட்டமைப்பு, "பி பைனோம் கிராமம் எரிக்கப்பட்டு, கிராமத்திலேயே இரு ஆண்களையும் கொன்ற பின்பு அந்தக் கும்பல் பெண்களின் பக்கம் திரும்பி அவர்களைப் பிடித்துச்சென்றிருக்கிறது. இந்த ஈவிரக்கமற்ற செயலைச் செய்த கும்பல், அதைப் படம் பிடித்து பகிரவும் செய்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பேருக்கு ஒரு எஃப்.ஐ.ஆர் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. வேறெந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பட்டியல் பழங்குடியின தேசிய ஆணையமும், தேசிய மகளிர் ஆணைய மும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள் ளது. தேசிய அளவில் சர்ச்சை எழுந்தபின், மணிப்பூர் காவல்துறை சுறுசுறுப்பாகி புதிய எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்ததோடு குற்றவாளிகளில் ஒருவரை கைதும் செய்துள்ளது.

Advertisment

"பிரதமரின் மௌனமும் செயலின்மையுமே மணிப்பூர் அராஜகத்துக்குக் காரணமாகியுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்கிற கருத்தாக்கமே தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கையில், அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கமுடி யாது. மணிப்பூர் மக்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம்''’என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அந்த வீடியோவில் நிர்வாணமான இரு பெண்கள் மட்டுமே காட்டப் பட்டனர். மூன்று பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பழங்குடித் தரப்பில் புகார் எழுந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, "குற்றவாளிகள் ஒருவரும் தப்ப முடியாது'' என்று உறுதியளித்துள்ளார்.